தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகன் இல்லாத கவலையில் மகள்களைக்கொன்ற தாய்; பீகாரில் கொடூரம் - கொடூர சம்பவம்

பீகார் மாநிலத்தில் மகன் பிறக்காததால் பெற்ற மகள்களை தாயே கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகன் இல்லாத கவலையில் மகள்களைக் கொன்ற தாய்; பீகாரில் கொடூரம்
மகன் இல்லாத கவலையில் மகள்களைக் கொன்ற தாய்; பீகாரில் கொடூரம்

By

Published : Sep 2, 2022, 9:23 PM IST

புக்சர்: பீகார் மாநிலம் புக்சர் மாவட்டத்தில் நேற்று இரவு பிங்கி தேவி எனும் பெண் பெற்ற மகள்களைக் கொன்றுள்ளார். உயிரிழந்த சிறுமிகள் 10 வயதான பூனம் குமாரி, 8 வயதான ரூனி குமாரி மற்றும் மூன்று வயது குழந்தை பப்லி குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனக்கு ஆண் குழந்தை இல்லாததால், மாமியார் தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் அதனால் தான் தனது மகள்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக மகள்களைக்கொன்ற பிங்கி தேவி கூறியுள்ளார்.

சிறுமிகள் இறந்தது குறித்து பிங்கியின் மாமியார் கூறுகையில், "இரவில் சாப்பாடு ஊட்டிவிட்டு மூவரையும் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள். காலையில் குழந்தைகளை டீ குடிக்க அழைத்தபோது வெளியே வரவில்லை. பின்னர் நான் அங்கு சென்று பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்தனர்", என்றார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பளர் ஸ்ரீராஜ் கூறுகையில், ''மகன் இல்லாத கவலையில், தன் மகள்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக, விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டார்" எனத் தெரிவித்தார்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை

ABOUT THE AUTHOR

...view details