தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 வயது சிறுவனை கொன்றது ஏன்? தாய் பரபரப்பு பேட்டி - சிறுவன் கொலை

ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் 3 வயது சிறுவனை கொன்ற தாயை காவலர்கள் கைது செய்தனர்.

Asiya
Asiya

By

Published : Apr 13, 2022, 5:15 PM IST

பாலக்காடு : கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சுட்டிபரா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது சிறுவனின் தாய் அசியா என்பது தெரியவந்தது.

அசியாவும், அவரது கணவர் முகம்மது ஷான் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர். ஷான் அவரது மனைவியை பிரிந்து சென்ற நிலையில் அசியா தனியாக வசித்துவந்துள்ளார். அப்போது அவருக்கு இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நட்பு திருமணத்தை மீறிய உறவாக உருவெடுத்துள்ளது.

அசியாவின் ஆண் நண்பருக்கு அசியா திருமணமானவர் என்பது தெரியாது. இதனால் அவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் அசியா, தனது மகனான முகம்மது சமீரை கொன்றுவிட்டு, ஆண் நண்பருடன் குடும்பம் நடத்த சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது பாலக்காடு கஸ்பா காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கணவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மனைவி

ABOUT THE AUTHOR

...view details