தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்..! - கர்நாடகாவில் உடல் உறுப்புகள் தானம்

கர்நாடகாவில் சாலை விபத்தில் சிக்கி கோமாவில் இருந்த தனது மகளின் உடல் உறுப்புகளை, தாய் தானம் செய்தார்.

Mother donates her daughter's organs  Coma  accident  road accident  brain death  organs donate  karnataka Mother donates her daughters organs  மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்  உடல் உறுப்புகள் தானம்  உடல் உறுப்புகள்  கர்நாடகாவில் உடல் உறுப்புகள் தானம்  கர்நாடகாவில் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்
உடல் உறுப்புகள்

By

Published : Sep 17, 2021, 8:59 PM IST

கர்நாடகா: ஹவேரி மாவட்டம் ரட்டிஹள்ளி தாலுகா ஹல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவனா ஹிரேமத் (20). இவர் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி ஷிமோகா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார்.

இதனையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

இதனால் அவரது தாயார் வசந்தம்மா தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து கவனாவின் உடலில் இருந்து தோல், இதயம், சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகியவை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஜீரோ ட்ராஃபிக்கில் அனுப்பப்பட்டது. பின்னர் கவனாவின் இறுதிச்சடங்கு ஹல்லுரு கிராமத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details