கீழத்தூர், மலப்புரம்: கேரளா மாநிலம் கீழத்தூரில் மனைவி, இரண்டு குழந்தைகளை ஆட்டோவில் அமரச் செய்து தீ வைத்து, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் கிடந்த கணவரின் உடலை காவல்துறையினர் மீட்டனர். மேலும், ஆட்டோவிலிருந்து பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனைவி, குழந்தையை ஆட்டோவில் தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி முஹமது-ஜாஸ்மின். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முஹமது இன்று(மே 5) கொண்டிபரம்பில் உள்ள தனது மனைவி ஜாஸ்மின் வீட்டிற்கு சென்று அவரையும், இரண்டு குழந்தைகளையும் கீழத்தூர் அழைத்து வந்தததாக கூறப்படுகிறது.
மனைவி, குழந்தையை ஆட்டோவில் தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! மனைவி ஜாஸ்மின், மற்றும் இரண்டு குழந்தைகளை ஆட்டோவில் அமரச் சொல்லி முஹமது தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் முஹமதுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. பின் அவர் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் பலத்த தீக்காயங்களுடன் ஆட்டோவிலிருந்து மீட்டக்கப்பட்ட முஹமதின் 5 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் கூறினர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தம்பி இறந்த சோகம் தாங்காமல் அண்ணனும் தூக்கிட்டுத் தற்கொலை!