தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவுடன் மோசமான காலகட்டத்தை இந்தியா எதிர்கொள்கிறது: ஜெய்சங்கர் - சீனாவுடன் மோசமான காலகட்டத்தை இந்தியா எதிர்கொள்கிறது

40 ஆண்டுகளில் இல்லாத அளவு, சீனாவுடன் மோசமான காலத்தை தற்போது சந்திக்கிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

S. Jaishankar
S. Jaishankar

By

Published : Dec 9, 2020, 7:26 PM IST

இந்தியா வெளியுறவு விவகாரங்களின் தற்போதைய சூழல் குறித்த கருத்தரங்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி மூலம் பங்கேற்றார்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், இந்தியா-சீனா உறவு குறித்து முக்கிய கருத்தை முன்வைத்தார். கடந்த 30-40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான சூழலை இரு நாடுகளும் சந்தித்துவருகின்றன எனத் தெரிவித்த ஜெய்சங்கர், சீனா ஆயிரக்கணக்கான வீரர்களை கல்வான் பள்ளத்தாக்கில் குவித்து பதற்றமான சூழலை உருவாக்கியதை நினைவுக்கூர்ந்தார்.

1975ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக, இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டது வருந்தத்தக்கது எனத் தெரிவித்த அவர் இதுபோன்ற அசாதாரண சூழலிலும் இரு நாடுகள் அமைதி காத்துவருகின்றன எனவும் தெரிவித்தார்.

இரு நாட்டு தலைமையும் விரைவாக கலந்துபேசி அமைதி தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என நம்புவதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்

ABOUT THE AUTHOR

...view details