டெல்லி:உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே உழவர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது, துணை முதலமைச்சர் மயூரியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக உழவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
அப்போது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதலமைச்சரை வரவேற்க தனது காரில் சென்றார். அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு உழவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, அவர்களை இடித்துத் தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் உழவர்கள் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் நால்வர் உயிரிழந்தனர்.