பெங்களூரு: ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகிறது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவீச்சில் மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Kharkiv Medical University) மூன்றாம் ஆண்டு படித்துவந்தவர் நவீன் சேகரப்பா கியானாகவுடர் (Naveen Shekarappa Gyanagoudar). இவர் மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று (மார்ச் 21) காலை பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்தடைந்தது.
அவரது உடலுக்கு மாநிலத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். உக்ரைன்-ரஷ்யா போர் மூண்ட நிலையில் அங்குள்ள மாணவர்கள் விமானங்கள் மூலம் டெல்லி, பெங்களூரு, மும்பை, காசியாபாத் வழியாக இந்தியா திரும்பினர்.
இதற்கிடையில் குண்டுவீச்சில் நவீன் கொல்லப்பட்டார். நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, “நவீனை உயிருடன் அழைத்து வர முடியவில்லை என்பதை நினைக்கும் போது மனம் வலிக்கிறது. நவீன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும். நமது அரசாங்கம் நவீன் குடும்பத்துக்கு என்றென்றும் ஆதரவாக நிற்கும். அவரின் இளைய சகோதரரை அரசு பார்த்துக் கொள்ளும்” என்றார்.