டெல்லி:உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து பிப்ரவரி 14, பிப்ரவரி 20, பிப்ரவரி 23ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய நாள்களில் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதியும், மார்ச் 3ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.