நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் திமுக உறுப்பினரின் டி ஆர் பாலுவின் கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை 82 ஆயிரத்து 893 ஹெக்டேர் பரப்பளவு காடுகளின் நிலங்கள், காடுகள் அல்லா பகுதிகளாக பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்புதலானது 1980 வனப்பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 82 ஆயிரம் ஹெக்டேர் பகுதியில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலம் 19 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ஒப்புதல் வழங்கி முதலிடத்தில் உள்ளது.
அதற்கடுத்தபடியாக, ஒடிசா 11 ஆயிரம் ஹெக்டேருடன் இரண்டாம் இடத்திலும், தெலங்கானா எட்டாயிரம் ஹெக்டேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - இரு காவலர்கள் மரணம்