தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி செல்ஃபிகள் பதிவேற்றம் - மூவண்ணக்கொடி செல்ஃபி படங்கள்

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

more-than-6-crore-tiranga-selfies-uploaded-on-the-har-ghar-tiranga-website-under-har-ghar-tiranga-abhiyan
more-than-6-crore-tiranga-selfies-uploaded-on-the-har-ghar-tiranga-website-under-har-ghar-tiranga-abhiyan

By

Published : Aug 16, 2022, 5:59 PM IST

டெல்லி:இதுகுறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இல்லந்தோறும் மூவண்ணக்கொடியை ஏற்றும் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருந்தார். இந்த பிரச்சாரம் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை வலுப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவண்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களும் அடங்கும்.

அதேபோல, சண்டிகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 5,885 பேர் கலந்து கொண்டு தேசிய கொடியை அசைத்து மகிழ்ந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற ஒத்துழைப்பு நாட்டின் அசைக்க முடியாத ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான எடுத்துக்காட்டாகும். பிரதமரின் கோரிக்கையையேற்று இந்த பிரச்சாரத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிகார் அமைச்சரவை விரிவாக்கம்... 31 அமைச்சர்கள் பதவியேற்பு

ABOUT THE AUTHOR

...view details