தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியல் பழிவாங்கல்: வீடுகளுக்கு தீ வைப்பு - 12 பேர் பலி - அரசியல் பழிவாங்கல்

ராம்பூர்ஹத் அருகே அரசியல் பழிவாங்குதல் காரணமாக 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

வீடுகளுக்கு தீ வைப்பு
வீடுகளுக்கு தீ வைப்பு

By

Published : Mar 23, 2022, 6:27 PM IST

மேற்கு வங்கம்: பரிஷால் திரிணாமுல் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாது ஷேக் (38) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிர்பும் மாவட்டம் ராம்பூர்ஹத் அருகே போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) இரவு கும்பல் தீ வைத்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்டுய் கிராமத்தில் காவல்துறை ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களைக் கொண்ட குழு கிராமத்திற்கு வரவுள்ளது. டிஎம்சி பிர்பும் மாவட்டத் தலைவர் அனுப்ரதா மோண்டல், மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளனர்.

வீடுகளுக்கு தீ வைப்பு

டிஜிபி மனோஜ் மாளவியா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ராம்பூர்ஹத் தீ விபத்தில் அப்பகுதி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், இந்த சம்பவத்திற்கு அரசியல் தொடர்பு இல்லை" என்றார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினர், பாது ஷேக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போக்டுய் கிராமத்தில் 10 முதல் 12 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை (மார்ச் 21) மாலை போக்டுய் கிராமத்தில் பரிஷால் திரிணாமுல் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாது ஷேக் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து பேர் அவர் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் பலத்த காயமடைந்த பாது ஷேக் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையும் படிங்க:கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம் - மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details