தமிழ்நாடு

tamil nadu

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு- 4 லட்சம் மக்கள் பாதிப்பு

By

Published : May 19, 2022, 7:34 AM IST

அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பெரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் வெள்ளப்பெருக்கு- 4 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாமில் வெள்ளப்பெருக்கு- 4 லட்சம் மக்கள் பாதிப்பு

கவுகாத்தி:அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக இதுவரை காணாத பெரும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள 28 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 4.03 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலும், கச்சார், ஹோஜாய், லக்கிம்பூர், நாகோன், தர்ராங், திப்ருகர் மற்றும் டிமா ஹஸ்ஸாவோ ஆகிய பகுதிகளில் மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ASDMA (அஸ்ஸாம் மாநில பேரிடர் ஆணையம்) அறிக்கையின்படி, மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தில் 1089 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் ASDMA அறிக்கை கூறுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 178 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

4 லட்சம் மக்கள் பாதிப்பு
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு-
அஸ்ஸாம் மாநில பேரிடர் ஆணையம்

இதையும் படிங்க:பெங்களூருவில் இடியுடன் கூடிய பலத்த மழை!

ABOUT THE AUTHOR

...view details