தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா தடுப்பூசி; 175.37 கோடி டோஸ்களை கடந்தது - vaccine side effects

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 175.37 கோடி டோஸ்களை கடந்ததாகவும், மாநிலங்களுக்கு 172.21 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More than 172 crores COVID-19 vaccines provided to States
More than 172 crores COVID-19 vaccines provided to States

By

Published : Feb 21, 2022, 1:27 AM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30.81 லட்சத்துக்கும் அதிகமாக (30,81,336) கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 175.37 கோடியைக் (1,75,37,22,697) கடந்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 172.21கோடிக்கும் மேற்பட்ட (1,72,21,28,840) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 11.16 கோடிக்கும் மேற்பட்ட (11,16,84,166)தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இன்றைய கரோனா நிலவரம்; இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details