மும்பை:மகாராஷ்டிரா மற்றும் பிகார் மாநிலத்தின் மும்பை, பாட்னா. புனே நகரங்களில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் ரூ. 51 கோடி மதிப்புள்ள 101.7 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 கைது செய்யப்பட்டுள்ளனர். சூடான் நாட்டை சேர்ந்த தங்க கடத்தல் கும்பல் ஒன்று நேபாள எல்லை வழியாக ரூ. 50 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதனால் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மகாராஷ்டிரா மற்றும் பிகார் மாநிலத்தின் மும்பை, பாட்னா, புனே நகரங்களில் "ஆபரேஷன் கோல்டன் டவ்ன்" என்ற அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வேட்டையில் 3 நகரங்களிலும் இருந்தும் ரூ.51 மதிப்புள்ள 101.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ரூ.1.35 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.