திருணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்துவந்த முகுல் ராய், 2017இல் பாஜகவில் இணைந்தார். அக்கட்சியில் தேசிய துணைத் தலைவர் என்ற உயர் பதவி முகுல் ராய்க்கு வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில் நிலையில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 18 இடங்களைக் கைப்பற்றி பாஜக மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக முன்னேற்றம் கண்டு எதிர்க்கட்சியானது. அபார வெற்றிபெற்ற மம்தா மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்.