புனே: மகராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் 2 இடங்கள், தானே கிராமப் பகுதிகளில் 31 இடங்கள், தானே நகரத்தில் 9 இடங்கள், பயாந்தர் மற்றும் கர்நாடகாவில் தலா 1 இடம் என மொத்தம் 44 இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (டிச.9) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் உடன் மகராஷ்டிரா மற்றும் கர்நாடகா காவல் துறையினர் இருந்தனர்.
பயங்கரவாத சதித்திட்ட வழக்கில் 13 பேர் கைது.. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்ஐஏ அதிரடி ரெய்டு!
13 people arrested in ISIS terror conspiracy case: பயங்கரவாத சதி திட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 13 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
By ANI
Published : Dec 9, 2023, 10:02 AM IST
இந்த நிலையில், மகராஷ்டிராவின் புனேயில், தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 13 பேரை, பயங்கரவாத செயலுக்கு சதித் திட்டம் தீட்டுதல் என்பதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பயங்கரவாத சிந்தனை கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, நாட்டிற்கு எதிராக செயல்பட வைப்பதற்கான சதித் திட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ஆப் மூலம் கடன் வாங்கும் நண்பர்களே உஷார்! முதல்ல இத படிங்க!