தமிழ்நாடு

tamil nadu

மோர்பி பாலம் விபத்து: 135 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

By

Published : Feb 22, 2023, 6:06 PM IST

குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் உயிரிழந்த 135 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோர்பி பால விபத்து
மோர்பி பால விபத்து

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் பலியான 135 பேரின் குடும்பத்தாருக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் அஜந்தா நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த பாலம் கடந்தாண்டு அக்டோபர் 30ஆம் தேதி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது.

இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து வழக்கை குஜராத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனிடையே அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு இன்று (பிப்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலத்தை பராமரித்து வந்த அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்கும் என்று அறிவிதிருப்பது போதாத தொகையாகும்.

இந்த விபத்தால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. பல குழந்தைகள் அனாதைகளாகிவிட்டனர். பல்வேறு குடும்பங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் கொடூரக் கொலை.. மனித தலை உடன் சுற்றித்திரிந்த நபர் கைது..

ABOUT THE AUTHOR

...view details