மான்சா (பஞ்சாப்): பஞ்சாபி மொழி பாடகரும், காங்கிரஸ் நிர்வாகியுமான சித்து மூஸ்வாலாவின் உடல் பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான மூசாவில் இன்று (மே 31) தகனம் செய்யப்பட்டது.
28 வயதான சித்து மூஸ்வாலா கடந்த மே 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இன்று காலை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவரது உடல் மூசா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பஞ்சாப், ராஜஸ்தான், சண்டிகர் எனப் பல இடங்களில் இருந்து உறவினர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து சித்து மூஸ்வாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று மதியம் அவரது உடல் அவரது விருப்பமான டிராக்டரில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.