சண்டிகர்:ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புடைய இரண்டு நபர்களை மோகா காவல்துறையினர் இன்று(ஜூன் 3) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதையடுத்து, நகரின் பல்வேறு இடங்களில் காவல்துறையின் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலை தொடர்பாக பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் பொலிரோ வாகனம், அதில் இளைஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் பவன் பிஷ்னோய் மற்றும் நசீப் ஆகியோரை மோகா காவல்துறையினர் வேறு வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.