தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Pragyan Rover: நிலவின் வெப்பத்தை பதிவு செய்த ரோவர்.. லேண்டர் அனுப்பிய தகவல்.. இஸ்ரோவின் லேட்டஸ்ட் அப்டேட்! - update released by ISRO

Moon south pole soil temperature: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கி 4 நாட்கள் ஆன நிலையில், முதற்கட்ட சோதனையாக நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்து அசத்தியுள்ளது விகர்ம் லேண்டர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Moon south pole soil temperature: இஸ்ரோ வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!
Moon south pole soil temperature: இஸ்ரோ வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 10:45 PM IST

பெங்களூரு:சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆக்.23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திரத்தை பெற்று இந்தியா சாதனை படைத்தது. இஸ்ரோவின் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான் 3-ன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் தென் துருவத்தைச் சுற்றியுள்ள மண்ணின் வெப்பநிலையை ஆய்வு செய்து விகரம் லேண்டர் அசத்தியுள்ளது.

சந்திரயான் 3-ன் பிரக்யான் ரோவர், நிலவின் தென்துருவத்தில் வெப்பத்தை ஆய்வு செய்வதற்காக நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் 10 சென்டிமீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்துள்ளது . நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலை பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும். இந்நிலையில் இந்த புதிய ஆய்வால் உலகளாவிய விண்வெளி அறிவியல் துறையில் இந்தியா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு ஆழங்களில் நிலவின் மண்ணின் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைக் காட்டும் வெப்பநிலை வரைபடத்தை இஸ்ரோ தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 'ChaSTE' சோதனை எனப்படும் சந்திரானின் மேற்பரப்பு தெர்மோபிசிக்கல் பரிசோதனை (Chandra's Surface Thermophysical Experiment) பேலோடை லேண்டரில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பேலோடானது நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆழங்களில் வெப்பநிலையை பரிசோதித்து அதன் விவரங்களை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க:கூட்டு பயிற்சியின் போது விமான விபத்து - அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த 3 பேர் பலி!

இந்நிலையை இந்த பேலோடால் வெப்பநிலை ஆய்வு செய்ய மேற்பரப்பிற்கு அடியில் 10 செண்டி மீட்டர் வரை ஆழத்தை அடையலாம் எனவும் மற்றும் 10 தனித்தனி வெப்பநிலை சென்சார்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. “மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிலவின் மேற்பரப்பு பகுதியில் உள்ள வெப்பநிலையை வரைப்படம் குறிக்கிறது. நிலவின் தென் துறுவத்தின் எடுக்கப்பட்ட முதல் தகவல் இதுவே. மேலும், பல சோதனைகள் நடைபெற்று கொண்டிருகின்றன” என இஸ்ரோ தனது X பக்கத்தில் இன்று (27.08.2023) தகவலை பகிர்ந்துள்ளது.

லேண்டரில் பொருத்தப்பட்ட பேலோட் , விண்வெளி இயற்பியல் ஆய்வகம் (Space Physics Laboratory), விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ( Vikram Sarabhai Space Centre) இணைந்து அகமதாபாத்தில் உள்ள பிஸிக்கல் ரிசர்ச் லெபோர்டோரி (Physical Research Laboratory) மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை பரவியுள்ளது. சந்திரயான் 3ல் ஏழு பேலோடுகளும், விக்ரம் லேண்டரில் நான்கும், பிரக்யான் ரோவரில் இரண்டு, மற்றும் ஒரு உந்துவிசை மாட்யூல் பேலோடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேலோடுகள் பலவிதமான அறிவியல் சோதனைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிலவின் மண்ணை ஆய்வு செய்ய ChaSTE உடன், விக்ரம் லேண்டார் தன்னுடன் RAMBHA, அதாவது நிலவில் உள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களைப் பற்றி படிப்பதற்கு, நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்ய (ILSA) , மற்றும் நிலவின் அமைப்பு இயக்கவியலை கண்டறிய (LRA) ஆகியவற்றையும் கொண்டு சென்றுள்ளது எனக் கூறிகின்றனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில் நிலவில் மிக மென்மையான தரையிறக்கம் செய்யப்பட்ட லேண்டர் எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதையும் படிங்க:Mann ki Baat : சந்திரயான்-3 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details