டெல்லி:நான்காவது நாள் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 23) காலை தொடங்கியது. கூட்டர் தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு - பெகாசஸ் உளவு விவகாரம்
முன்னதாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் (ஜூலை 26) திங்கள்கிழமை வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு
இந்த நிலையில் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத் தொடர், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக (ஜூலை 26) திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பெகாசஸை பயன்படுத்திய மோடி, அமித்ஷா- ராகுல் குற்றச்சாட்டு