நாடாளுமன்ற மழைக் காலக்க கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம் ஆகியவற்றை காட்டி இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 9) மக்களவை கூடிய நிலையில் நாள் முழுவதும் எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று மசோதாக்களை விவாதிக்காமல் அரசு நிறைவேற்றியது.
நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்கள்
- வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு திருத்த மசோதா
- வைப்புக்காப்பீடு மற்றும் கடன் உறுதிக் கழக திருத்த மசோதா
- பழங்குடியினருக்கான அரசியலமைப்பு உத்தரவு திருத்த மசோதா