டெல்லி:ஜுன் 3 முதல் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, நாட்டின் 85 விழுக்காட்டுப் பகுதிகளில் மழைப்பொழிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 7ஆம் தேதி, தென்மேற்குப்பருவமழையின் தீவிரம் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார், ஜம்மு- காஷ்மீர், லடாக், ஹரியானாவின் சில பகுதிகள், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகியப் பகுதிகளில் இடைவிடாமல் பொழிந்தது.
இதுகுறித்து நேற்று(ஜுன் 13) இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலில், நாட்டின் தலைநகர் டெல்லியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் பருவமழை வரலாம் என்றும்; இந்த தென்மேற்குப் பருவமழை நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல மழைப்பொழிவைத் தரும் எனவும் கூறியுள்ளது.
ஜுன் 15 முதல் ஜுன் 16 வரை, ஹரியானா மற்றும் சண்டிகரில் காலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும்; பஞ்சாப், ஹரியானா பகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.