புதுச்சேரி:மரப்பாலம் 100 அடி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே ஜான்பால் நகரில் அனுமதியின்றி சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. நேற்று (ஆக.6) இரவு வானரப் பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி வினோத் உட்பட நான்கு பேர் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு - rowdy
புதுச்சேரியில் சூதாட்டக் கிளப்பில் விளையாடிக்கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி உள்பட நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு
இது தொடர்பாக முதலியார்பேட்டை காவல்துறையினர் ரவுடி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அனுமதி இல்லாமல் இயங்கிய சூதாட்டக் கிளப்பிற்கு அரசியல் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி திமுக பிரமுகர் கொலையில் அரசியல் போட்டி?