ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சில தினங்களுக்கு முன் கனிமவளத் துறையில் நடந்த பெரும் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பூஜா சிங்லாலின் வாட்ஸ்அப் உரையாடலை எடுத்து பார்த்த போது பூஜா பல கோடி பரிவர்த்தனைகளை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
அவருக்கும் அவரது கணவர் அபிஷேக்கிற்கும் நடந்த சாட்சிகளில் இந்த பணபரிவர்த்தனைகள் செய்யப்பட்டது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில்,ராஞ்சி அமலாக்கத் துறை பிரிவு பூஜாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையில் சரோகி கட்டட நிறுவனத்திற்கு பல கோடிகளை அனுப்பியுள்ளதும். பூஜாவின் கணவிரின் பெயரில் புதியதாக கட்டப்படும் பல்ஸ் மருத்துவமனை கட்டடபணிக்காக பரிமாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளன.