டெல்லி:உலகத் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் அவ்வப்போது கருத்து கணிப்பு எடுத்துவருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை 75 விழுக்காடு மக்கள் ஆதரிப்பதாகவும், 20 விழுக்காடு மக்கள் நிராகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோடியின் ஆதரவு விழுக்காடு 55 ஆக உயர்ந்துள்ளது.
இது பிற நாட்டுத் தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகும். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, "உலக அளவில் பிரதமர் மோடியின் புகழ் அதிகரித்துவருகிறது. அவரது அர்ப்பணிப்புக்கு, உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதனால்தான் நெருக்கடி காலத்திலும் அவர் உலகத் தலைவர்களிடையே நம்பர் ஒன் தலைவராக இருக்கிறார். இது இந்தியர்களுக்கான பெருமையான தருணமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 18 பேர் கொலை!