தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்’ - பிரதமர் மோடி வலியுறுத்தல்! - இலங்கை

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்த கோரி பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவிடம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 21, 2023, 10:41 PM IST

டெல்லி: இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 21) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் தமக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி வருகின்றது. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடிக்கும் விக்கிரமசிங்கேவுக்கும் இடையிலான பரந்த அளவிலான பேச்சுவார்த்தையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது, இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் மோடி தனது ஊடக அறிக்கையில், "இரண்டு நாள் பயணமாக இலங்கை அதிபர் வியாழக்கிழமை டெல்லி வந்தார். இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் நாங்கள் பேசினோம். ஜனாதிபதி விக்ரமசிங்கே தங்களது நாட்டை உள்ளடக்கிய அணுகுமுறை பற்றி என்னிடம் கூறினார். மேலும் நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தித் திட்டத்தின் பல கூறுகள் ஆகியவற்றிற்காக விக்ரமசிங்கே முன்வைத்த விரிவான முன்மொழிவை தன்னுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இலங்கை அரசு தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்றும், சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மீள்கட்டுமான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் என்றும், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும், இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் என்றும் நம்புகிறேன்" என தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை உறவுகளின் 75 ஆவது ஆண்டு விழா குறித்து பேசிய மோடி, "இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் குடிமக்களுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும், இதனுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியாவும் பங்களிக்கும்" என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விக்கிரமசிங்கே கூறியபோது, "நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு ஊடாக அதிகாரப் பகிர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான தனது விரிவான முன்மொழிவுகளை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த நடவடிக்கைகளில் ஒருமித்த கருத்துடனும் மற்றும் தேசிய ஒற்றுமையுடனும் செயல்படுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பு அழைத்துள்ளேன். அதன்பிறகு அரசாங்கம் அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் என்றும், இந்த முயற்சிகளில் மோடி தனது ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும்" விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இதையும் படிங்க:Manipur violence: ‘மௌனம் கலைத்த பிரதமர் விரைந்து நடவடிக்கை தேவை’ - அமைச்சர் துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details