டெல்லி: டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்பாதையில் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா அவென்யூ அனைத்து நவீன பொது பயன்பாட்டு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து 20 மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 9 முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த அவென்யூவிற்கு 'கர்தவ்ய பாதை' என மறுபெயரிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு பேசிய சுதந்திர தின உரையின் போது, 'ஆசாதி கா அமிர்த காலின்' எனவும் குடிமக்களுக்கு 'பஞ்ச் பிரான்' என ஐந்து சபதங்கள் எடுக்குமாறு அழைப்பு விடுத்தார். அதில் ஒன்று தான் "குடிமக்களின் கடமை" என்பதாகும். இதன் நோக்கம் காலனித்துவ மனநிலை தொடர்பான சின்னங்களை ஒழிக்க வேண்டும் என மோடி தெரிவித்தார்.
இதன் காரணமாகவே ராஜ்பாதைக்கு 'கர்தவ்ய பாதை' என்று பெயரிடப்பட்டதற்கு காரணமாகும். இதுபோன்ற திட்டத்தின் முக்கிய நோக்கம் குடிமைப் பயனர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதாகும். மேலும் இது விற்பனையாளர்களுக்கு இடம் மற்றும் வசதிகளை வழங்குகிறது என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) மூத்த அதிகாரி கூறினார்.
மேலும் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் அவென்யூவில் 2 கிமீ நீளத்திற்கு 74 வரலாற்று ஒளிக் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு இடம் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய தேவையான இடங்களில் 900 புதிய மின்விளக்குக் கம்பங்களை பொருத்தப்பட்டுள்ளது என அந்த அதிகாரி கூறினார்.
வளாகத்தின் வரலாற்றுத் தன்மையை பராமரிக்க பொல்லார்டுகளுக்கு பதிலாக 16.5 கி.மீ. ராஜ்பாதையில் ஆயிரக்கணக்கான வெள்ளை மணற்கற்கள் போடப்பட்டுள்ளது. இந்தியா கேட் வளாகத்தில் பாதசாரி நடைபாதைகள் சேர்க்கப்பட்டு மொத்த கால்வாய் பகுதி பரப்பு 19 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்:அவென்யூவில் எட்டு வெவ்வேறு இடங்களில் கழிப்பறைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் குடிநீர் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன என அதிகாரி தெரிவித்தார். இதில் மொத்தம் 64 பெண் கழிப்பறைகள், 32 ஆண் கழிப்பறைகள் மற்றும் 10 அணுகக்கூடிய கழிப்பறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களில் 7 ஒழுங்கமைக்கப்பட்ட விற்பனை நிலையங்களும் சேர்க்கப்பட்டுள்ளன, என்றார்.
சென்ட்ரல் விஸ்டா அவென்யூவின் புதுப்பிப்பு பணி கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. 477 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 862 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பார்லிமென்ட் கட்டிடம் கட்டுவதும் இந்த மறுவடிவமைப்பு திட்டத்தில் அடங்கும்.
இதையும் படிங்க:"கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்"