தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் நரேந்திர மோடி - iit convocation

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28ஆம் தேதி கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 54ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

By

Published : Dec 25, 2021, 7:04 AM IST

கான்பூர்: நரேந்திர மோடி டிசம்பர் 28ஆம் தேதி கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 54ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்குகிறார். இதனைத்தொடர்ந்து, ட்விட்டர் பதிவு வாயிலாக, பட்டமளிப்பு விழாவில் தனது உரைக்கான பரிந்துரைகளை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், கான்பூர் ஐஐடியில் மாணவர்கள் மத்தியில் உரையாடுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து கான்பூர் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் அபய் கரண்டிகர், ”கடந்த ஆண்டு கான்பூர் ஐஐடிக்கு சிறப்புவாய்ந்த ஆண்டு. நாட்டுக்கான பல உயிர் காக்கும் முயற்சிகளை ஐஐடி மேற்கொண்டது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதரும் அனைத்து முக்கியப் பிரமுகர்கள் குறித்தும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பட்டம் வாங்கும் அனைத்து மாணவர்களும் இத்தருணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகூர்ந்து, தன்னலமற்று சமுதாயப் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். மொத்தம் ஆயிரத்து 723 பேர் பட்டம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Omicron Outbreak: மகாராஷ்டிராவில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்

ABOUT THE AUTHOR

...view details