தமிழ்நாடு

tamil nadu

நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் - உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு குறித்து மோடி!

By

Published : Feb 7, 2021, 2:25 PM IST

டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

உத்தரகண்ட் தெளளிகங்கா பள்ளத்தாக்கு பகுதியில் பனிச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரிஷி கங்கா நீர் மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பலர் அதில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தபோவன் மின் திட்டத்தின் அணை உடைந்துள்ளதால், 150க்கும் மேற்பட்டோர் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக, இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்பு பணியில் விமானப்படையை பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, நிலைமையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மாநிலத்துடன் ஒட்டுமொத்த நாடுமே துணை நிற்கிறது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் தேசமே பிரார்த்திக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையின் பணிகள் குறித்து மூத்த அலுவலர்களுடன் கேட்டறிந்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details