மகாராஷ்டிர மாநிலம், புனேவில், ’நமோ பவுண்டேசன்’ நடத்திவருபவர் மயூர் முண்டே. இவர் அவுந்த் (Aundh) பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் ஒன்றைக் கட்டினார்.
நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் உந்தப்பட்டு கோயில் கட்டியதாக அவர் முன்னதாகக் கூறியிருந்தார். இந்தக் கோயில் ஆகஸ்ட் 15ஆம் தேதியான சுதந்திர தினத்தன்று திறக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் திறக்கப்பட்ட இந்த பிரதமர் நரேந்திர மோடி கோயில், ஆரஞ்ச் நிற ஷீட்களைக் கொண்டு மூடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி கோயில் மூடல் இது குறித்த முன்னதாகக் கிடைத்த தகவலின்படி, இரவோடு இரவாக கோயிலில் இருந்த பிரதமர் நநேரந்திர மோடியின் சிலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், பாஜக அலுவலகத்தில் இச்சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் மேலும் 36,401 பேருக்கு கரோனா