டெல்லி: வியட்நாம் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளபாம் மின் சின் உடன் தொலைபேசி மூலம் முதல் முறையாக உரையாடிய பிரதமர் மோடி, இந்திய பெருங்கடல் விவகாரம், கரோனா பேரிடர் காலத்தில் வியட்நாம் இந்தியாவுக்கு அளித்த ஆதரவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாம் நாட்டின் புதிய பிரதமராக பாம் மின் சின் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக அவரிடம் உரையாடினர்.
முதலில் பாம் மின் சின்-க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த பல்வேறு விஷயங்களை பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.