கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.
இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விதி புனித் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான நடிகரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. அவரின் அற்புதமான ஆளுமையை வரும் தலைமுறையினர் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!