தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து - மோடி வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடைந்து உடல்நலம் முன்னேற்றமடைய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து
பிரதமர் வாழ்த்து

By

Published : Oct 14, 2021, 11:53 AM IST

Updated : Oct 14, 2021, 12:11 PM IST

டெல்லி: மன்மோகன் சிங் (89) காய்ச்சல், உடல் சோர்வு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (அக். 13) அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மன்மோகன் சிங்கை மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்மோகன் சிங் விரைந்து குணமடைந்து, உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரும் மன்மோகன் சிங் குணமடைய தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்

காங்கிரசின் முதுபெரும் தலைவர் மன்மோகன் சிங் 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அதற்கு முன்னதாக, நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகப் பதவி வகித்தார். இவர் நிதியமைச்சராக இருந்த 1991ஆம் ஆண்டில்தான் நாட்டின் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தனது 89ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய மன்மோகன் சிங், சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெங்கையா நாயுடுவால் சீற்றமடைந்த சீனா: பதிலடி தந்த இந்தியா!

Last Updated : Oct 14, 2021, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details