தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 28, 2021, 10:08 PM IST

Updated : Aug 28, 2021, 10:32 PM IST

ETV Bharat / bharat

புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களையும், அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 28) மாலை காணொலி மூலமாகத் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஜாலியன்வாலா பாக் நினைவிடம், Jallianwala Bagh Smarak, Modi dedicates renovated Jallianwala Bagh Smarak
அர்ப்பணித்த பிரதமர்

டெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களைப் போற்றும்விதமாக அப்பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடம் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுபிக்கப்பட்ட கட்டடங்களையும், அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை காணொலி மூலமாகத் திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இந்தக் காணொலி வாயிலான கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பங்கேற்றார்.

புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம்

முப்பரிமாண கூடங்கள்

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பயன்பாட்டில் இல்லாத, அதிகம் பயன்படுத்தப்படாத கட்டடங்களைச் சீரமைத்து நான்கு அருங்காட்சியக காட்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்காலத்தில் பஞ்சாபில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை முப்பரிமாண முறையில் இந்தக் கூடங்கள் காட்சிப்படுத்துவதோடு, கலை, சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்டிருக்கும்.

ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியக காட்சிக்கூடம்

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்வுகளைக் காண்பிக்கும் ஒலி-ஒளி காட்சியும் இடம்பெறும். வளாகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாபின் கட்டடக் கலை அமைப்பை ஒத்து விரிவான பாரம்பரிய புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சாஹீதி கிணறு சீரமைக்கப்பட்டுள்ளது. நினைவு சின்னத்தின் மையப் பகுதி சீரமைக்கப்பட்டு, நீர்நிலை அல்லி குளமாக புத்தாக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ஜொலிக்கும் புதிய இடங்கள்

முறையான வழிகாட்டுதல்களுடன்கூடிய புனரமைக்கப்பட்ட வழித்தடங்கள், முக்கிய இடங்களில் ஒளி வசதிகள், உள்ளூர் அழகு செடிகளைக் கொண்டு தோட்ட அமைப்புகள், தோட்டம் முழுவதும் ஒளி வசதிகள் உள்ளிட்ட புதிய, நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சால்வேஷன் மைதானம், அமர் ஜோதி (அணையா விளக்கு), கொடிக் கம்பத்திற்கென புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக, முழுமையாக புதிப்பிக்கப்பட்ட நினைவிடம் குறித்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜக வருமானம் 50% அதிகரிப்பு, உங்கள் வருவாய்? ராகுல் காந்தி

Last Updated : Aug 28, 2021, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details