ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியது.
வெற்றியை இலக்காக கொண்டு வியக்கத்தக்க மன உறுதியை இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி பதிவு செய்த வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர்களின் மிகச் சிறந்த ஆற்றலும் ஆர்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது.