டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈத்-உஸ்-ஜுஹா நல்வாழ்த்துக்கள். ஈத்-உஸ்- பண்டிகை தியாகம் மற்றும் மனித சேவையின் சின்னமாகும்.
மனித குலத்தின் சேவைக்காக நம்மை அர்ப்பணித்து, நாட்டின் செழிப்புக்காகவும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.