தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

மோடி தலைமையிலான அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப்பெற்று, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித்தர வேண்டும் என சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

Sitaram Yechury
Sitaram Yechury

By

Published : Aug 10, 2021, 8:50 AM IST

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79ஆவது ஆண்டு நினைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றுவரும் இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கி நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டில் உழவர்களும், தொழிலாளர்களும் அவர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்துப் போராடிவருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப்பெற்று, உழவர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித்தர வேண்டும்.

தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மோடி தலைமையிலான அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசை வீட்டுக்கு அனுப்பி, ஜனநாயகத்தைக் காப்பது அனைத்து குடிமக்களின் கடமையாகும். அரசு தனியார்மயத்தை நிறுத்தி, தேசிய வளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:உலக சிங்கங்கள் தினம் - வனவேந்தனை காப்பது நமது கடமை

ABOUT THE AUTHOR

...view details