புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளரும் நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான கே. ஜி. சங்கர் (70) இன்று (ஜனவரி 17) மாரடைப்பால் காலமானார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல் - பாஜக எம்எல்ஏ கே ஜி சங்கர் இறப்புக்கு மோடி இரங்கல்
புதுச்சேரி: பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் மாரடைப்பால் காலமானதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
![பாஜக எம்எல்ஏ உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல் modi condolences for Puducherry MLA Shankar death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10274895-thumbnail-3x2-three.jpeg)
modi condolences for Puducherry MLA Shankar death
அதில், " புதுச்சேரி சட்டபேரவை உறுப்பினர் ஸ்ரீ கே.ஜி. சங்கர் காலமானதால் வேதனை அடைந்துள்ளேன். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்ட அவர், அங்கு பாஜகவை வலுப்படுத்தவும் பணியாற்றியுள்ளார். இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ காலமானார்