தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

"மக்களின் முயற்சிகள் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைந்தால், சேவை செய்வதற்கான நமது பலம் அதிகரிக்கிறது," என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது - பிரதமர் மோடி
குஜராத் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது - பிரதமர் மோடி

By

Published : May 29, 2022, 11:42 AM IST

ராஜ்கோட்:அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நேற்று (மே 28) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்,

என்னை குஜராத் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது. தேசத்திற்கு சேவை செய்வதில் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நாட்டின் ஏழைகளுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு, என் சொந்த மாநிலமான குஜராத் தனக்குள் புகுத்திய நன் மதிப்புகளிலிருந்து தான் வெளிப்படுகிறது என்று பெருமிதம் கொண்டார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், அரசும், குடிமக்களும் இணைந்து, அனைவருக்கும் நலன் காக்க பாடுபட்டுள்ளனர். மக்களின் முயற்சிகள் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைந்தால், சேவை செய்வதற்கான நமது பலம் அதிகரிக்கிறது, அட்கோட்டில் உள்ள மாதுஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்த பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உயர்தர மருத்துவ உபகரணங்களை கிடைக்கச் செய்து, இப்பகுதி மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளை வழங்கும், என கூறினார்.

இதையும் படிங்க:மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி - வெங்கையா நாயுடு

ABOUT THE AUTHOR

...view details