தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி பதிலளிக்க மறுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி - பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்

எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர் மோடி, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து பதிலளிக்க மறுப்பது ஏன்? என எம்.பி. ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.

எம்பி ப.சிதம்பரம்
எம்பி ப.சிதம்பரம்

By

Published : Aug 10, 2021, 2:59 PM IST

டெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடியை கேள்வி கேட்டு ராஜ்ய சபா எம்.பி. ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த ட்விட்டர் பதிவில், பெகாசஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது அது உண்மை என்று வைத்துக்கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன?

ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே. எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவர் ஏன் பேச மறுக்கிறார்? என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து!'

ABOUT THE AUTHOR

...view details