தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் நடமாடும் வாகன சேவை தொடக்கம்!

ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய நடமாடும் வாகன சேவையை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரியில் நடமாடும் வாகன சேவை தொடக்கம்
புதுச்சேரியில் நடமாடும் வாகன சேவை தொடக்கம்

By

Published : Aug 12, 2021, 4:56 PM IST

Updated : Aug 12, 2021, 5:26 PM IST

புதுச்சேரி: பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்யும் வகையில் அவர்களது வீடுகளுக்கே சென்று பதிவு செய்வதற்கான நடமாடும் வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.12) சட்டப்பேரவை வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, சுகாதாரத்துறை செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ரங்கசாமி

அதைத் தொடர்ந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு இரண்டு டயாலிசிஸ் செய்யும் கருவிகளை முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் தானியங்கி காரை வடிவமைத்த எம்.ஐ.டி மாணவர்கள்

Last Updated : Aug 12, 2021, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details