பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் கச்சி தாலப் என்ற பகுதியில் உள்ள காலி நிலத்தில், தனியார் செல்போன் நிறுவனம் தங்களது சேவைக்காக டவர் அமைத்துள்ளனர். ஆனால், இந்த நிலத்தின் உரிமையாளருக்கு செல்போன் நிறுவனம் பல மாதங்களாக வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த நிலத்தின் உரிமையாளரிடம் வந்து, தாங்கள் தனியார் செல்போன் நிறுவனத்தின் அதிகாரிகள் என்றும், நிறுவனம் நஷ்டத்தில் செல்வதால் வாடகை செலுத்த முடியவில்லை என்றும், அதனால் டவரை அகற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு நிலத்தின் உரிமையாளரும் அனுமதி அளித்துள்ளார்.