டெல்லி மாநிலத்தில் நியூ உஸ்மான்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சிலிண்டர் விநியோகிக்கும் நபரிடம் இருந்த மொபைல் போனை பறித்துச் செல்ல முயன்றுள்ளனர். அந்தச் சமயத்தில் அப்பகுதியிலிருந்த இளைஞர் ஒருவர் சுதாரித்து இருசக்கர வாகனத்தைத் தடுக்க முயன்றார்.
இதை எதிர்பாராத வழிப்பறி ஆசாமிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அங்கிருந்து இருவரும் தப்பியோட முயலும்போது உள்ளூர்வாசிகள் அவர்களைச் சுற்றிவளைத்தனர். இதையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.