தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக செல்போன் சேவைகள் துண்டிப்பு! - HK Lohia murder

சிறைகளின் டிஜி ஹேமந்த் கே லோஹியா தனது இல்லத்தில் கொலைசெய்யப்பட்ட நிலையில் ஜம்மு மற்றும் ராஜௌரி மாவட்டத்தில் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக செல்போன் சேவைகள் துண்டிப்பு...!
ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக செல்போன் சேவைகள் துண்டிப்பு...!

By

Published : Oct 4, 2022, 2:18 PM IST

ஸ்ரீநகர்(ஜம்மு&காஷ்மீர்): சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்காக ஜம்மு மற்றும் ராஜௌரி மாவட்டங்களில் செல்போன் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன. ஜம்மு & காஷ்மீரின் சிறைகளின் டிஜி ஹேமந்த் கே லோஹியா தனது இல்லத்தில், நேற்று(செப்.3) கொலை செய்யப்பட்டார். இவரின் வீட்டுப் பணியாளரை குற்றவாளியாக காவல்துறையினர் சந்தேகித்து தேடி வருகின்றனர்.

இதுகுறித்து டிஜிபி தில்பங் சிங் கூறுகையில், அது ஒரு நடக்கக்கூடாத அசம்பாவிதம் என்றும், காவல் துறையால் சந்தேகப்பட்டு வரும் தலைமறைவாகியுள்ள யாசிர் எனும் அவரது பணியாளரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கொலையை செய்தவர் லோஹியாவின் உடலைக் கொளுத்தவும் முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவதாக தில்பங் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜம்மு& காஷ்மீரைச் சேர்ந்த பீஏஎஃப்எஃப் எனும் ஓர் புதிய அமைப்பு இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சந்தேகப்படும் குற்றவாளியைத் தேடத் தொடங்கி, இந்த வழக்கு குறித்த விசாரணையையும் தொடங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஹேமந்த் கே லோஹியா கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைகளின் டிஜியாகப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை இமாச்சல பிரதேசம் பயணம்

ABOUT THE AUTHOR

...view details