வாஷிங்டன்:உலக அளவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் கீரவாணி சர்வதேச விருதுகளை பெற்றதற்கு அவரது வழிகாட்டிகளுக்கும், ராமோஜி நிறுவனத்தின் தலைவர் ராமோஜி ராவ் உள்ளீட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளீட்டோர் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ஆர்ஆர்ஆர், இப்படத்தில் இடம்பிடித்த நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் கீரவானிக்கு சிறந்த க்ரிட்டிக் தேர்வு விருது வழங்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விமர்சகர்கள் தேர்வு விருதையும் ஆர்ஆர்ஆர் பெற்றது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் கிரிடிக்ஸ் அசோசியேஷன் (LAFCA) சார்பாக கீரவாணியின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை விருதையும் பெற்றது. இது குறித்து ஆர்ஆர்ஆர் படக்குழுவின் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து இசையமைப்பாளர் கீரவாணி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘கோல்டன் குளோப் உட்பட RRR க்காக 4 சர்வதேச விருதுகளைப் பெற்ற பிறகு வீடு திரும்புகிறேன். ராமோஜி ராவ் மற்றும் தெலுங்கு மொழியில் என்னை நிலைக்க செய்து என் இசையை மெருகேற்றிய பாலச்சந்தர் சார், பரதன் சார், அர்ஜுன் சர்ஜா மற்றும் பட் சாப் உள்ளீட்ட அனைத்து வழிகாட்டிகளுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கீரவாணி பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார். ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான நாடு நாட்டு சமீபத்தில் சிறந்த அசல் பாடலுக்கான மதிப்புமிக்க கோல்டன் குளோப் விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Critics Choice Awards 2023: ஆர்ஆர்ஆர் திரைப்படம் Best Foreign Language Film விருதை வென்றது