தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சபாநாயகராக நாளை பதவியேற்கவுள்ள செல்வம் எம்எல்ஏ! - pudhucherry assembly speaker

புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மனு தாக்கல் செய்த பாஜக எம்எல்ஏ செல்வம், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

mla-selvam-elected-as-pudhucherry-assembly-speaker
புதுச்சேரி சபாநாயகராக நாளை பதவியேற்கவுள்ள செல்வம் எம்.எல்.ஏ.

By

Published : Jun 15, 2021, 3:16 PM IST

புதுச்சேரி:சபாநாயகர் தேர்தல் நாளை (ஜூன்.16) நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜூன்.14) தொடங்கியது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மணவெளி தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை செயலர் முனுசாமியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இவருடைய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்தார். பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நமச்சிவாயம் வழிமொழிந்தார். இன்று 12 மணிவரை மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவரைத் தவிர வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இவர், நாளை பதவியேற்கவுள்ளார்.

புதுச்சேரி அரசின் 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை 9.30 மணியளவில் தொடங்குகிறது.

இதையும் படிங்க:தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை: திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details