தமிழ்நாடு

tamil nadu

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் - கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

By

Published : Oct 28, 2021, 1:31 AM IST

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளுக்கு நாங்கள் அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வைகை அணையில் நீர் திறப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த அக். 24ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயனின் கடித்ததிற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், " அக். 24ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்தில், நமது இரு மாநில மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவு குறித்தும், நல்லுறவினை மேலும் வலுப்படுத்தப்படுத்துவது குறித்தும் நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அந்த கடிதத்திற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.

கடந்த 10 நாள்களில் கேரளாவில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் மிகுந்த கவலைகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இக்கட்டான காலத்தில் நாங்கள் உங்களுடன் நிற்போம் என்றும், மக்களின் துயரங்களைப் போக்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

இதுதொடர்பாக, வெள்ள நிவாரணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும், அனைத்து விதமான உதவிகளையும் வழங்குமாறு, மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்.

நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டது போன்று முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், எங்கள் தரப்பினர் உங்களின் குழுவினரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். இன்று (அக். 27) காலை 9.00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 137.60 அடியிலும், அணையிலிருந்து 2,300 கன அடி நீர் வெளியாகி வருகிறது.

நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதைப் போன்று வைகை அணையில் இருந்து அதிகபட்ச நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், மத்திய நீர்வள ஆணையம் (CWC) அனுமதித்துள்ள அளவின்படியும்தான் தற்போது வைகை அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க இதுதொடர்புடைய அலுவலர்களிடம் உத்தரவிட்டுள்ளேன்.

குறிப்பாக, உங்கள் அரசாங்கம் நீர் திறப்பிற்கு முன்பு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கவதற்காக, நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த தேவையான அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே உங்கள் குழுவிடம் பகிர்ந்து கொள்ளுமாறு அலுவலர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன்.

இரு மாநிலங்கள் மற்றும் அதன் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை எனது அரசு உறுதி செய்யும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details