பெங்களூரு:கர்நாடகா மாநிலம் ஹாசனில் நேற்று (டிசம்பர் 26) கூரியர் கடையில் மிக்ஸி வெடித்து சிதறியதில் கடை உரிமையாளர் சசி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் கே.ஆர்.புரம் நகரில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் இரவு 7:30 மணியளிவில் நடந்துள்ளது. இதுகுறித்து ஹாசன் போலீசார் தரப்பில், இந்த விபத்தில் காயமடைந்த உரிமையாளர் சசிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தில்லை.
கூரியர் கடையில் மிக்ஸி வெடிப்பு.. கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்.. - ஹாசன் மிக்சி வெடிப்பு
கர்நாடகா மாநிலத்தில் கூரியர் கடையில் மிக்ஸி வெடித்து சிதறியதில் உரிமையாளர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவயிடத்தில் தடயவியல் வல்லுநர் குழு ஆதாரங்களை சேகரித்துவருகிறது. வெடித்து சிதறிய மிக்ஸி கடந்த வாரம் கூரியர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதனை வாங்கிச்சென்றவர் 2 நாளுக்கு பின் அது சரியான முகவரியில் இருந்து வரவில்லை என்று கூறி மிக்ஸியை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், வெடித்து சிதறியுள்ளது. இந்த மிக்ஸி அனுப்பப்பட்ட முகவரி, பெறப்பட்ட முகவரியை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:சென்னையில் மேலும் ஒரு போலி என்ஐஏ அதிகாரி கைது