தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவைச் சேர்ந்த மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு கோவிட்-19! - மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை

தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Mithun Chakraborty
Mithun Chakraborty

By

Published : Apr 27, 2021, 3:10 PM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூத்த நடிகரும், பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்திக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இவருக்கு இன்று(ஏப்.27) பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மிதுன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவர்கள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றிவருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் மல்டா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கோவிட்-19 விதிமுறைகளை மீறி 500க்கும் மேற்பட்ட கூட்டத்தைக் கூட்டியதாகக் கூறி, மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம்(ஏப்.29) நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாருதி சுசூகி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details